இந்திமொழி உயர்நிலைப் பள்ளிகளில் 5, 6, 7, படிவங்களில் கட்டாயமாகும் என்று 1937-ல் அறிவிக்கப்பட்டது. அப்போது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கினார். ‘தமிழர் கழகம்’ உருவாக ஊக்கம் கொடுத்தார். ‘இந்தி பொது மொழியா?’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறைதிருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும்? சிவபெருமான் கைவிட மாட்டார்’’ என்று அனுப்பி வைத்தார். 1948-ல் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது பெரியாருடனும் அரசியல் இயக்கத்தவர்களுடனும் மேடை ஏறினார்.
Podcast channel manager- பிரபு வெங்கட்