மொத்தமே ஒன்றரை ஆண்டு காலம்தான் முதலமைச்சராக இருந்தார். 10 ஆண்டுகளுக்கான சாதனைகளை ஒன்றரை ஆண்டுகளில் செய்து விட்டார்.
ஓமந்தூராரின் மொத்த சிந்தனையுமே உணவு உற்பத்தியைப் பெருக்குவதில்தான் இருந்தது.
ஆற்றுப்பகுதி, ஆறுகள் இல்லாதபகுதி எனப் பிரித்து பயிர் உற்பத்தியைப் பெருக்கத் திட்டங்கள் போட்டார். கிணறுகள் வெட்ட கடன் கொடுத்தது இவர்தான். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிணறுகள் இவரது ஆட்சியில் வெட்டப்பட்டன. மாநிலத்தில் அப்போது 10 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் இருந்துள்ளன. எல்லாப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டங்கள் போடச் சொல்லி விதைகளை வழங்கினார்.
இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளைக் காப்பாற்ற பயிர் இன்சூரன்ஸ் இவர் காலத்தில் வந்தது. கால்நடை இன்சூரன்ஸையும் கொண்டு வரத் திட்டமிட்டார்.
மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ (எம்.ஐ.டி.) என்ற உயர்கல்வி நிறுவனத்துக்கு சென்னையில் ஒப்புதல் அளித்தவர் அவர்.
Podcast channel manager- பிரபு வெங்கட்