கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி போகும்போது பள்ளத்தில் கார் உருண்டு காமராஜருக்கு பயங்கர காயம். ரத்தம் ஒழுகியது. லேசாக நினைவு திரும்பியதும் ‘தென்னகம்’ ஜி.ஆனந்தனை அழைத்து, ‘இந்த விபத்துச் செய்தியை பெருசா போடாதேண்ணேன்’ என்றார். காமராஜர் போபால் வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு ‘மெயில்’ இதழில் அவரை பாராட்டி கணபதி எழுதினார். போபால் வந்த காமராஜர், கடுமையாக அவரை கோபித்துக் கொண்டார். ‘நீங்கள் அதிர்ச்சி அடையறது மாதிரி நான் ஏதும் எழுதலையே’ என்றார் கணபதி. ‘என்னைப் பாராட்டி எதுக்கு எழுதுறீங்க? இதெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்கிறார் காமராஜர்.
Podcast channel manager- பிரபு வெங்கட்