ஒருமுறை முதலமைச்சர் திருப்பதி போனார். திரும்பும்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து பலாப்பழத்தைக் கொடுத்தார்கள். டிரைவரும் வாங்கி வைத்துவிட்டார். கடுமையாக கோபம்கொண்டார் ஓமந்தூரார். ‘‘இப்ப பலாப்பழத்தை எடுப்பாய். நாளைக்கு கோயில் நகையை வாங்குவாயா” என்று கேட்டார். ‘ரமண மகரிஷி சொன்னால், முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சொன்னவர் இவர். பதவிக்கு வந்த பிறகு, அதே ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவர் ஏதோ சலுகை கேட்டபோது, ‘இதில் எல்லாம் அரசு தலையிட முடியாது’ என்று மறுத்தார்.
Podcast channel manager- பிரபு வெங்கட்